

சேலம்,
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா ரெயில் நிலையத்தில் யார்டு மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 4 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, போத்தனூர்-தன்பாத் அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-16619) வருகிற 28-ந் தேதி, அடுத்த மாதம் (டிசம்பர்) 5, 12 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் தன்பாத்-போத்தனூர் அமிர்த் பாரத் எக்ஸ்பி ரஸ் (வண்டிஎண்-16620) வருகிற 30-ந் தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஹட்டியா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-22837) டிசம்பர் 14-ந் தேதியும், மறு மார்க்கத்தில் எர்ணாகுளம்-ஹட்டியா வாராந் திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-22838) டிசம்பர் 16-ந் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன. யார்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.