மணல் அள்ளிச்சென்ற எம்எல்ஏவின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் பலி - தென்காசியில் பரபரப்பு

தென்காசி சட்டமன்ற உறுப்பினரின் டிராக்டர் மோதி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணல் அள்ளிச்சென்ற எம்எல்ஏவின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் பலி - தென்காசியில் பரபரப்பு
Published on

தென்காசி,

தென்காசி சட்டமன்ற உறுப்பினரின் டிராக்டர் மோதி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழ சுரண்டை அருகே உள்ள குளங்களில் சரல் மணலினை எடுத்து சென்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினரின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் ராஜமுகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், டிராக்டரின் ஓட்டுநர் பாக்கியசாமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் தந்தை ராஜதுரை மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தனது முகநூல் பக்கத்தில், தனக்கு சொந்தமான டிராக்டர் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவத்தை அறிந்து தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com