திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் பலியான 4 வயது சிறுமி - நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் பள்ளியில் இருந்த சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளியின் உள்ளே, போதையில் இருந்த நபர் இயக்கிய கார் மோதி 4 வயது மாணவி பலியானதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

Also Read
ஜனநாயகப்பூர்வமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்! - மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால், பள்ளியில் இருந்த சிறுமியின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதற்கு மத்தியில், பள்ளிக்கல்வித்துறையினர், வருவாய்த்துறையினர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என ஒருவர் கூட சம்பவ இடத்திற்கு வராத கொடூரமும் அரங்கேறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா? அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டதா?

Also Read
விஜய் நடித்த படங்களை தியேட்டர்கள், தொலைக்காட்சிகளில் போடக்கூடாது: தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
கோப்புப்படம்

மொத்தத்தில், பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு நீதியை பெற்று தராமல் வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசு மீண்டுமொரு முறை ஆட்சி அமைப்பதற்கு ஆசைப்படுவதற்கான தகுதியையும் இழந்துவிட்டது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com