வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலக்கோட்டை வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
Published on

நிலக்கோட்டையை அடுத்த காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சிங்கராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com