நெல்லையில் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை சந்திப்பு, கருப்பன்துறையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
நெல்லையில் கொலை வழக்கில் 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
Published on

நெல்லை,

நெல்லை சந்திப்பு, கருப்பன்துறையைச் சேர்ந்த சுடலைமணி மகன் கரண்(எ) யேசுவா (வயது 25), சுந்தர்பால் மகன் மாரிமுத்து(20), முருகன் மகன் சிவா(27), சுடலைமணி மகன் கௌதம்(29) ஆகிய 4 பேர், நெல்லை மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேற்சொன்ன 4 பேரும் நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com