தமிழகத்தில் 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி


தமிழகத்தில் 40  காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி
x
தினத்தந்தி 14 July 2025 8:05 AM IST (Updated: 14 July 2025 10:09 AM IST)
t-max-icont-min-icon

டிஎஸ்பி, உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை,

நிர்வாக காரணங்களுக்காக காவல்துறையில் அவ்வப்போது பணியிட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் , காவல் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகரக் காவல்துறையின் எம்கேபி நகர் சரக காவல்துறை உதவி ஆணையராக உள்ள மணிவண்ணன் மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல,மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவுள்ள காவ்யா, மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

மேலும், கோவை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், சேலம் காவல் உதவி ஆணையர் செல்வம், தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பண்டாரசாமி, சென்னை திருமங்கலம் உதவி ஆணையர் பிரம்மானந்தன் உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story