15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் பங்கேற்கும் கோடை விழா தொடக்கம்

15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் பங்கேற்கும் கோடை விழா தொடக்கம்
15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் பங்கேற்கும் கோடை விழா தொடக்கம்
Published on

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் பங்கேற்கும் கோடைவிழா நேற்று தொடங்கியது.

கோடை விழா

தஞ்சையில் தென்னக பண்பாட்டு மையம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கோடை விழா நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு கோடை விழா நேற்று தொடங்கியது.

இந்த விழா வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. நேற்று மாலை நடந்த இதன் தொடக்க விழாவில் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோடைவிழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், முரசு கொட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களை அனைத்து மாநில கலைஞர்களும் வரிசையாக நின்று தங்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி வரவேற்றனர்.

நடன நிகழ்ச்சி

பின்னர் கலை விழா தொடங்கியதும் குஜராத் மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் திரைப்பட பாடகி சின்னபொண்ணுவின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மராட்டியம், ஜார்கண்ட், உத்திரபிரதேசம் உள்பட பல்வேறு மாநில கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

400 கலைஞர்கள்

இந்த கலைவிழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

மேலும் கோடை விழாவையொட்டி பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருட்கள் கண்காட்சியும், உணவு திருவிழாவும் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கலை விழா தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

முடிவில் நிர்வாக அலுவலர் சீனிவாசன்அய்யர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com