400 கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது; 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின

கடலூ, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் 400 கிராமங்கள் தண்ணீல் மிதக்கின்றன. 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.
400 கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது; 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின
Published on

பெருவெள்ளம்

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களின் வழியாக பயணித்து இறுதியாக கடலூரில் வங்க கடலில் சங்கமிக்கிறது. இதன் மூலம் தென்பெண்ணை ஆறுக்கு கடலூர் ஒரு வடிகாலாகவே இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இதனால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில், கே.ஆர்.பி. மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபாநீர் மற்றும் தென்பெண்ணை ஆறு, பயணிக்கும் பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும் ஆற்றில் கலந்து, கடந்த 49 ஆண்டுகள் இல்லாத வகையில் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மிதக்கும் கிராமங்கள்

அந்த வகையில், கடலூர் தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றால் இந்த பெருவெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை. மேலும் ஆறு வங்க கடலில் கலக்கும் தாழங்குடாவில் தண்ணீரை உள்வாங்க முடியாமல் போனது. எனவே ஆறு, அதன் பாதையில் இருந்து திசைமாறி கரையோர பகுதிக்குள் புகுந்தது. சில இடங்களில் கரையில் உடைப்பும் ஏற்பட்டது. இதனால் கடலூ, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையை ஒட்டி உள்ள சுமார் 400 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தையும் பெருவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

2-வது நாளாக மீட்பு பணி

இதேபோல இந்த பகுதிகளில் உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் புகுந்த பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் மீட்பு பணி நடந்தது. கடலூர் குமரப்பன் நகர், குறிஞ்சி நகர், கங்கணாங்குப்பம், உச்சிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com