தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 4 ஆயிரத்து 95 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மாதவரம் பேருந்து நிலையத்திற்கு 160 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 4 ஆயிரத்து 95 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11 மற்றும் 12-தேதிகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் மூலமாக சுமார் 2 லட்சத்து 31 ஆயிரத்து 450 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தொடர் விடுமுறை முடிந்து 14 மற்றும் 15-ந் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 14-ந் தேதி (இன்று) 2,240 சிறப்புப் பஸ்கள் (திருச்சி- 255, மதுரை மற்றும் திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50, நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்-225, திருவண்ணாமலை-325 விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து 305) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று, 15-ந் தேதி (நாளை) 1,325 சிறப்புப் பஸ்கள் (திருச்சி-105, மதுரை மற்றும் திண்டுக்கல்-75, சேலம்-75, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூர்-200, கோயம்புத்தூர்-20, திருநெல்வேலி-10, நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10, கும்பகோணம் 125, திருவண்ணாமலை-175 விழுப்புரம்-85 மற்றும் இதர ஊர்களிலிருந்து -420) என கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 565 சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாதவரம் பேருந்து நிலையத்திற்கு 160 சிறப்பு பஸ்களும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு 370 சிறப்பு பஸ்களும் என ஒட்டுமொத் தமாக 4,095 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு 14-ந் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பஸ்கள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், 15-ந் தேதி அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை சென்டிரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com