தூத்துக்குடியில் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

தூத்துக்குடி போலீசார், கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
கஞ்சா பறிமுதல், 5 பேர் கைது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

போலீசார் ரோந்து பணி

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

போலீசாரின் விசாரணையில், அவர்கள் தாளமுத்துநகர் இந்திராநகரைச் சேர்ந்த ரீத் மகன் ரீமஸ் (வயது 19), கிஷோர்(20), துரைசிங்நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அஜய்(19) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும், அவர்கள் விற்பனைக்காக 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது.

4.1 கிலோ கஞ்சா பறிமுதல்

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் உடனடியாக கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X