கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: கரூர் கண்ணீரில் மூழ்கிய தினம் இன்று

கரூர் வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: கரூர் கண்ணீரில் மூழ்கிய தினம் இன்று
Published on: 

சென்னை,

இந்த தேதியை அவ்வளவு எளிதாக தமி ழக மக்களால், குறிப்பாக கரூரை சேர்ந்தவர்களால் மறந்து விட முடியாது. காரணம், மக்களுக்கு மனதளவில் அதிக வலியை தந்த சம்பவம் நடைபெற்ற நாள் அது.

விஜய் பிரசாரம்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக பல ஆண்டுகளாக கோலோச்சியவரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய், கடந்த 2023-ம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி, அரசியலில் கால்பதித்தார். அதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அதன்படி மக்களை சந்திக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி அவர் கரூர் மாநகருக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை நேரில் காணும் ஆவலில் அவரது கட்சியினரும். பொதுமக்களும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்ட இடமான கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலை முதலே குவிந்தனர்.

ஆவலுடன் காத்திருப்பு

அப்பகுதியில் ஆட்டம் பாட்டத்துடன் பலர் தங்கள் தலைவரை காணப் போகிறோம் என்ற உற்சாகத்தில் திளைத்தனர். கட்சி சார்ந்த மற்றும் த.வெ.க. தலைவர் விஜய் நடித்த திரைப்பட பாடல்கள் ஒலிக்க, அதற்கு துள்ளிக்குதித்து ஆடிக்கொண்டிருந்தனர். திரையில் கண்ட விஜய்யை அன்று நேரில் காணும் மகிழ்ச்சியில் 2 வயது குழந்தை முதல் முதியவர்கள் வரை ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அன்று தங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு துயர சம்பவத்தை சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்கள் எதனை எதிர்பார்த்து காத்திருந்தார்களோ, அந்த நேரம் வந்தது. இரவு 7 மணியளவில் த.வெ.க.தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்தார். அங்கு திரணடிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அவர் தனது பிரசாரத்தை தொடங்கியதும், அவரை காணும் ஆவலில் பலர் முண்டியடிக்க கூட்டம் அங்குமிங்குமாக அலைமோத தொடங்கியது.

41 பேர் பலி

இதில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் ஒருவரையொரு தள்ளியபடி நிலை தடுமாறினர். நெரிசலில் சிக்கி கீழே விழுதவர்கள் பலர், தங்களது வாழ்வின் கடைசி நொடிகளை நெருங்கினர். சிறிது நேரத்தில் பிரசாரம் முடிந்து த.வெ.க. தலைவர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் நெரிசலில் சிக்கியவர்களை பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை தொடர்பான தகவல் அடுத்தடுத்து வெளியானது. நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை அதிகரித்தது. முடிவில் 41 பேரை இந்த நெரிசல் சம்பவம் பலி கொண்டு கரூரை கண்ணீரில் மூழ் கடித்து விட்டது. இதனால் கரூரின் துயர பக்கத்தில் 41 என்பது மறக்க முடியாத எண்ணாக மாறி விட்டது.

மறையாத வடு

அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் பல தரப்பட்ட கருத்துகளை தெரிவித்தாலும், உயிரிழந்த 41 பேரின் முகங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. குறிப்பாக அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு ஆட்டம்போட்ட 2 வயது குழந்தையான துரு விஷ்ணு உயிரிழந்தது நெஞ்சை நொறுக்கிவிட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு அப்போதைய தமிழக அரசு, த.வெ.க. என பல்வேறு தரப்பினரால் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய் யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கால சுழற்சியில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று ஓராண்டாகி விட்டது. ஆனால் மனக்காயம் மட்டும் ஆறவில்லை. அந்த நெரிசல் சம்பவம் கரூர் மக்கள் மனதில் மறையாத வடுவாக மாறிப்போனது.

நினைவு சின்னம்

கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சரும். த.வெ.க. தலைவரு மான விஜய், மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக த.வெ.க. சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி விரைவில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com