அகில இந்திய ஒதுக்கீட்டில் நடப்பாண்டில் 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி

மருத்துவ கலந்தாய்வை 4 சுற்றுகளாக நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் நடப்பாண்டில் 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி
Published on: 

சென்னை,

அகில இந்திய ஒதுக்கீட்டில் வரும் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மருத்துவ கலந்தாய்வுக்குழு கலந்தாய்வு மூலம் இடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வை 4 சுற்றுகளாக நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மருத்துவ கலந்தாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு 4 சுற்று கலந்தாய்வை நடத்தி முடித்த நிலையிலும், 948 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 5-வது சிறப்புச் சுற்று கலந்தாய்வை நடத்த, மருத்துவ கலந்தாய்வுக் குழு முடிவு செய்தது. அதன்படி, காலியாக இருந்த 948 இடங்களில் தகுதியான மாணவ-மாணவிகளை சேர்க்க ஏதுவாக சிறப்புச் சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அந்த கலந்தாய்வு முடிவில் 537 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் சிறப்புச் சுற்று கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட சூழலிலும், தற்போது 411 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டில் அனைத்து சுற்று கலந்தாய்வு நிறைவில் 60 முதல் 70 எம்.பி.பி.எஸ். இடங் கள் காலியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் அதனைவிட கூடுதலாக இடங்கள் காலியாக இருக்கின்றன.

X