

போர்ட் பிளேர்,
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் போர்ட் பிளேருக்கு அருகே இன்று (திங்கள்கிழமை) மாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பத்தின் மையப்பகுதி இந்தியாவின் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் 258 கி.மீ தென்கிழக்கில் இரவு 7.23 மணிக்கு ஏற்பட்டதாகவும், கடற்மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.