மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன
Published on

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சாலை வசதி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 424 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாராஜன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com