நெல்லையில் 4.250 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் ரவுண்டானா அருகில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் 4.250 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் ரவுண்டானா அருகில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த திருநெல்வேலி மாவட்டம், மேலபுத்தனேரியை சேர்ந்த சித்திரைபாபு மகன் சின்னதம்பி (வயது 26), தச்சநல்லூர் ஊருடையார்புரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் ராம்சூர்யா(24), மற்றும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அபிகுமார்(22) ஆகிய 3 பேரையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 4 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து போரீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com