தூத்துக்குடியில் வீடு புகுந்து 4.5 சவரன் நகை, பணம் திருட்டு

தூத்துக்குடியில் பெண் ஒருவர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த பார்த்த போது பீரோவில் இருந்த 4.5 சவரன் நகை, ரூ.4,500 பணம் திருடு போயிருந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 32), அங்குள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் முத்துலட்சுமி வீட்டை சாத்தி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் இருந்த 4.5 சவரன் நகை மற்றும் ரூ.4,500 பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






