455 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 455 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
455 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
Published on

புதுக்கடை, 

கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் பொறியாளர் நாகராஜன் ஆகியோர் புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 13 பிளாஸ்டிக் கேன்களில் 455 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் வாகனத்துடன் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். பின்னர் மண்எண்ணெய்யை அரசு குடோனிலும், வாகனத்தை வட்ட வழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com