தூத்துக்குடி மாவட்டத்தில் 46 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவு


தூத்துக்குடி மாவட்டத்தில் 46 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவு
x

தூத்துக்குடி கன்ட்ரோல் ரூம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தருவைகுளத்திற்கும், முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி கன்ட்ரோல் ரூமிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் உள்ள 46 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி கன்ட்ரோல் ரூம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தருவைகுளத்திற்கும், முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்டோரியா அற்புதராணி கன்ட்ரோல் ரூமிற்கும், சங்கரலிங்கம் ஏரலுக்கும், ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டத்திற்கும், குலசேகரப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் முகேஷ் அரவிந்த் புதுக்கோட்டைக்கும், ஸ்ரீவைகுண்டம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா குலசேகரன்பட்டினத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்துங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பெபின் செல்வா பிரிட்டோ, குரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மராஜ் ஆகியோர் ஆறுமுகநேரிக்கும், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் மெஞ்ஞானபுரத்திற்கும், ஓட்டப்பிடாரம் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் குலசேகரன்பட்டினத்திற்கும், கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் கொப்பம்பட்டிக்கும், கோவில்பட்டி மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கோவில்பட்டி கிழக்கிற்கும், கொப்பம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கடம்பூருக்கும், கழுகுமலை சப்-இன்ஸ்பெக்டர் துரைச்சாமி புதூருக்கும், கோவில்பட்டி அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி செய்துங்கநல்லூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன் தூத்துக்குடி தென்பாகத்திற்கும், பஞ்சவர்ணம் கயத்தாறுக்கும், சங்கரலிங்கபுரம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தூத்துக்குடி வடபாகத்திற்கும், எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் சங்கரலிங்கபுரத்திற்கும், மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் குரும்பூருக்கும், மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நிவேதா தூத்துக்குடி வடபாகத்திற்கும், கொப்பம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் எட்டயபுரத்திற்கும், கோவில்பட்டி பி.இ.டபிள்யூ. சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் தூத்துக்குடி தென்பாகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் சாத்தான்குளத்திற்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயா தெர்மல்நகருக்கும், தெர்மல்நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஐயம்பிள்ளை சூரங்குடிக்கும், தருவைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் மரிய இருதயராஜ் ஆறுமுகநேரிக்கும், கோவில்பட்டி மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் முறப்பநாட்டுக்கும், முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்அரசன் தாளமுத்துநகருக்கும், புதுக்கோட்டை அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் ஏ.கே.லதா சிப்காட்டிற்கும், கோவில்பட்டி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் கோவில்பட்டி மேற்கிற்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மணியாச்சி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை தூத்துக்குடி சிப்காட்டிற்கும், கடம்பூர் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மணியாச்சிக்கும், நாலாட்டின்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கோவில்பட்டி மேற்கிற்கும், கோவில்பட்டி மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் திருமலை கோவில்பட்டி கிழக்கிற்கும், குளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் செய்யதுங்கநல்லூருக்கும், மாசார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி குளத்தூருக்கும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மாசார்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சூரங்குடி சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ், விளாத்திகுளத்திற்கும், விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சூரங்குடிக்கும், மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தட்டார்மடத்திற்கும், சி.சி.பி. சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கியப்பன் தட்டார்மடத்திற்கும், லூர்து சேவியர் தூத்துக்குடி தென்பாகத்திற்கும், எஸ்.ஜே. மற்றும் ஹெச்.ஆர். சப்-இன்ஸ்பெக்டர் அங்களேஸ்வரி எட்டயபுரத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், நாலாட்டின்புதூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story