சென்னையில் ஒரே நாளில் 47 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு செயல்படுகிறது.
சென்னையில் ஒரே நாளில் 47 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
Published on

சென்னை,

சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனரகங்களுக்கு இடையேயும், இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கும் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு செயல்படுகிறது. இந்த குழுவினர் ஆய்வு செய்து மேற்கண்டவாறு இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யும்.

இவ்வாறு அந்த குழு பரிந்துரை செய்த 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தாம்பரம், ஆவடி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரகங்களுக்கு இடையில் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதேபோல, இந்த 3 கமிஷனரகங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களுக்கு 29 போலீஸ் இன்ஸ்பெக்டர் களை பணியிட மாற்றம் செய்தும் கமிஷனர் ஆணையிட்டார். நேற்று ஒரே நாளில் இந்த அதிரடி மாற்றத்தில் 47 இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com