இலங்கையில் இருந்து 47 தமிழக மீனவாகள் இன்று சென்னை வந்தனர்..!

இலங்கையில் இருந்து 47 தமிழக மீனவாகள் இன்று சென்னை வந்தனர்..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலையான 47 தமிழக மீனவாகள் இன்று சென்னை வந்தனர்.
Published on

சென்னை,

இலங்கை கடற்படையினரால் கடந்த 2021, டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 47 தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கிடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கடிதமும் அனுப்பியிருந்தார்.

தமிழக அரசின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை அந்நாட்டு நீதிமன்றம் ஜனவரி மாதம் விடுதலை செய்தது.

இந்நிலையில், இலங்கை கடற்படை கைது விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 47 மீனவர்கள் இலங்கையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com