சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற போலீஸ் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் 476 மனுக்கள் பெறப்பட்டன

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற போலீஸ் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் பெறப்பட்ட 476 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற போலீஸ் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் 476 மனுக்கள் பெறப்பட்டன
Published on

'உங்கள் துறையில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் சென்னையில் பணியாற்றும் போலீசாரின் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் 293 போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து 328 மனுக்களை பெற்றார்.

நேற்று 132 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து 148 மனுக்களை பெற்றார். 2 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 425 போலீஸ் அதிகாரிகள், போலீசாரிடம் இருந்து பணிமாறுதல், ஊதிய முரண்பாடு, தண்டனை களைதல், போலீஸ் குடியிருப்பு கோருதல், போலீஸ் சேம நல நிதியில் இருந்து மருத்துவ உதவி தொகை கோருதல் என துறைரீதியான 476 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது அந்தந்த போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், தனது அலுவலகத்தில் இந்த ஆண்டு இதுவரையில் போலீசாரிடம் இருந்து 830 கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளதாகவும், இதில் 634 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com