காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் 48 வழக்குகளுக்கு தீர்வு
Published on

லோக் அதாலத்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும், காஞ்சீபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அறிவுறுத்துதலின்பேரில் நேற்று காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக்அதாலத் நடைபெற்றது.

லோக் அதாலத்தை மாவட்ட நீதிபதி செம்மல் தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின், தலைவர், முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, காஞ்சீபுரம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரைமுருகன், பார் அசோசியேஷன் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் வித்தகவேந்தன், லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வக்கீல்கள் பத்மநாபன், சத்தியமூர்த்தி, மூத்த காப்பீட்டு நிறுவன வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

48 வழக்குகளுக்கு தீர்வு

இதில் காஞ்சீபுரம் வட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்பநல வழக்கு மற்றும் தொழிலாளர் நலவழக்குகள் என மொத்தம் 130 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 48 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக ரூ.2 கோடியே 23 லட்சத்து 4 ஆயிரத்து 236 இழப்பீடாக வழங்கப்பட்டது.

இதனை காஞ்சீபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com