

சென்னை,
தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று புதிதாக 481 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 43 ஆயிரத்து 690 ஆக உயர்வடைந்து உள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 490 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 994 ஆக உயர்வடைந்து உள்ளது. சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பால் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 402 ஆக உள்ளது. தற்போது 4,294 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 146 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 2,32,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,65,99,861 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 55,755 மாதிரிகள் கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,62,86,634 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 55,592 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது