நாங்குநேரியில் 49 கிலோ புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்: 5 பேர் கைது

நெல்லை மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வாகைகுளம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வாகைகுளம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 39), முருகன்(44), நாங்குநேரியை சேர்ந்த இசக்கிதுரை(24), வானுமாமலை(41), தம்புபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை(46) ஆகியோர் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

5 பேர் கைது:

அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட 49 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஐயப்பன், இசக்கிதுரை, முருகன், செல்லத்துரை, வானுமாமலை ஆகிய 5 பேரையும் இன்று கைது செய்தார்.

மேலும் அவர்களிடமிருந்து 49 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு காரையும் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com