49-வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு


49-வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு
x

இந்த ஆண்டு நுழைவு கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்து.

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், அரசியல் நூல்கள், சிறார் மற்றும் குழந்தைகள் நூல்கள், இலக்கியம் என பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் இந்த புத்தக கண்காட்சிக்கு தினமும் ஏராளமான வாசகர்கள் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள்.

இந்த ஆண்டு நுழைவு கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்து. இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி இன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மகாதேவன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பதிப்பு துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பதிப்பாளர்களை கவுரவிக்க இருக்கின்றனர்.

1 More update

Next Story