காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக திமுகவினர் சாலை மற்றும் ரயிலை மறித்து போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக திமுகவினர் சாலை மற்றும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #CavuryIssue
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக திமுகவினர் சாலை மற்றும் ரயிலை மறித்து போராட்டம்
Published on

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று 4-வது நாளாக தி.மு.க.வின் மறியல் போராட்டம் நீடித்தது. சென்னை கொரட்டூர் மற்றும் திருவொற்றியூரில் திமுகவினர் ரெயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை ஆலந்தூரில் மா.சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மற்றும் அதன் தோழமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மற்றும் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com