மதுரை சித்திரைத் திருவிழா 4ம் நாள் - மீனாட்சியம்மன் தங்கப் பல்லக்கில் பவனி

மதுரை சித்திரைத் திருவிழா 4ம் நாளான இன்று மீனாட்சியம்மன் தனி தங்கப் பல்லக்கிலும், சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கிலும் பவனி வந்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழா 4ம் நாள் - மீனாட்சியம்மன் தங்கப் பல்லக்கில் பவனி
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்தாண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டும் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகமும், பல்வேறு அமைப்பினரும், பக்தர்களும் திருவிழாவை நடத்த அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கோவிலுக்குள் உள்திருவிழாவாக நடத்த அரசு அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் சித்திரைத் திருவிழா 4ம் நாளான இன்று பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கிலும், மீனாட்சியம்மன் தனி தங்கப் பல்லக்கிலும், பவனி வந்தனர். கொரோனா பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சாமி புறப்பாடு நேரத்திலும் பகதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கோவிலுக்குள் விழா தற்போது நடைபெறுவதால் பக்தர்கள் இன்றி ஆடி வீதிகளில் சுவாமி வலம் வருவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் இணைய தளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com