சாதியை சொல்லி திட்டியவருக்கு 5 ஆண்டு சிறை

சாதியை சொல்லி திட்டியவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
சாதியை சொல்லி திட்டியவருக்கு 5 ஆண்டு சிறை
Published on

மதுரை, 

மதுரை வாடிப்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பாண்டி. கடந்த 2019-ம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த தங்கமலர் (வயது 40) என்பவர் பாண்டியை சாதியை சொல்லி திட்டி, தாக்கி உள்ளார். இதுகுறித்து பாண்டி வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குபதிந்து, தங்கமலரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் அழகன் ஆஜரானார். விசாரணை முடிவில், தங்கமலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி தீர்ப்பளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com