காரியாபட்டி பேரூராட்சியில் 5 அங்கன்வாடி மையங்கள்

காரியாபட்டி பேரூராட்சியில் 5 அங்கன்வாடி மையங்கள் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காரியாபட்டி பேரூராட்சியில் 5 அங்கன்வாடி மையங்கள்
Published on

காரியாபட்டி, 

காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பள்ளிவாசல் தெரு, 2-வது வார்டு ஏ.நெடுங்குளம், 3-வது வார்டு ஜெகஜீவன்ராம் தெரு, 8-வது வார்டு அச்சம்பட்டி, 14-வது வார்டு கே.கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் நிதி ஆயோக் (2021-22) சிறப்பு திட்டத்தின் கீழ் 5 புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த கட்டிடங்களை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார், இளநிலை செயற்பொறியாளர் கணேசன், கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன், நாகஜோதி ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com