ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய 5 பேர் கைது

நெல்லையில் ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜவுளிக்கடை ஊழியரை தாக்கிய 5 பேர் கைது
Published on

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தை ஆழ்வார். இவரது மகன் செந்தில்முருகன் (வயது 23). ஜவுளிக்கடை ஊழியரான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் 2 பேருடன் அங்குள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பினார். தியேட்டர் முன்பு வந்து கொண்டு இருந்த அவரை ஒரு கும்பல் பீர் பாட்டில் மற்றும் கையால் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்முருகன் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டவுன் வையாபுரி நகரை சேர்ந்த மகாராஜன் (22), செண்பகராஜ் (22), காவல்பிறை தெருவை சேர்ந்த இசக்கிராஜா (22), வையாபுரி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (24), டவுன் ஏ.பி.மாடத்தெருவை சேர்ந்த சுடலைமணி (22) ஆகியோர் ஜவுளிக்கடையில் துணி எடுக்கும் போது அவர்களுக்கும் செந்தில்முருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து செந்தில்முருகனை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 5 பேரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com