சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற 5 பேர் கைது

செங்குன்றம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் போதைப்பொருள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கைது
Published on

சென்னை,

ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் சுமிஷனர் அலுவலக எல்லைக்கு உடபட்ட பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செங்குன்றம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் போதைப்பொருள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கைது

அப்போது செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின், சந்துரு, அருண்குமார், கணேஷ், பார்த்திபன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் இருந்து 2.7 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com