நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

நெல்லையில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி, மேலப்பாளையம், கபீர்முகைதின் மகன் அமீர் சுகைள் (வயது 24), திருநெல்வேலி, பெருமாள்புரம், ஆறுமுகம் மகன் ரத்தினபாலன்(38), திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி, பேகம்பூர், துல்கர்னி ஆதம்பாவா மகன் சிக்கந்தர் ஷேக் ஒலி(26), அதே பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா மகன் சாகுல் ஹமீது(எ) கோச்சா சாகுல் ஹமீது(26) மற்றும் திருநெல்வேலி மேலப்பாளையம் சாகுல் ஹமீது பாதுஷா மகன் முஸ்ஸமில்முர்சித்(21) ஆகிய 5 பேர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்து, திட்டமிட்ட சட்டவிரோத செயலில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (மேலப்பாளையம் சரகம்) கண்ணதாசன், மேலப்பாளையம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்தங்கத்துரை ஆகியோர் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன 5 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, எம்.கே.பி. நகரை சேர்ந்த பால்துரை மகன் ரவிக்குமார்(49) என்பவர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை (சட்டம் ஒழுங்கு) போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி நேற்று ரவிக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story