காரமடை அருகே மர்ம விலங்கு கடித்து 5 கோழிகள் இறப்பு - வனத்துறையினர் விசாரணை

காரமடை அருகே மர்ம விலங்கு கடித்து 5 கோழிகள் இறந்தன இது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
காரமடை அருகே மர்ம விலங்கு கடித்து 5 கோழிகள் இறப்பு - வனத்துறையினர் விசாரணை
Published on

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை அருகே கண்டியூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65)விவசாயி, இவர் தனது தோட்டத்தில் மாடு,கோழிகளை உள்ளிட்டவை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30மணிக்கு தனது மாட்டில் பால் கறந்து அருகிலுள்ள பகுதி கொண்டு சென்று பால் ஊற்றவிட்டு மீண்டும் காலை 7.30 மணிக்கு தோட்டத்திற்கு வந்த போது, தோட்டத்தில் இருந்த 12 கோழிகளில் 6 கோழிகளை காணாமலும், 5 கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

மேலும் மாட்டு பட்டியில் கட்டி வைத்திருந்த பசுமாட்டின் பின்புறமும் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு தரையில் பதிக்கப்பட்டிரந்த அந்த மர்ம விலங்கின் கால் தடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கோழிகளையும் கால்நடைகளையும் தாக்கிய மர்ம விலங்கு குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்கள்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கூறுகையில்,

தற்போது காரமடை பகுதியில் காட்டுப்பன்றி, காட்டு யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாக நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது மர்ம விலங்குகள் தாக்கி கோழி மாடு பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து வனத்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மர்ம விலங்கு தாக்கி உயிரிழந்த கோழிகளுக்கு உரிய நஷ்டஈட்டு தொகையை வனத்துறையினர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com