

திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருட்கள், அரிய வகை விலங்கினங்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் மலேசியா மற் றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விமானங்களில் வந்த 60 பயணிகளிடம் இருந்து சுமார் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அதிரடி நடவ டிக்கையில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் திருச்சி விமான நிலைய கண்காணிப்பாளர்கள் 5 பேர் வேறு பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் இந்த பணியிடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நடவடிக்கையால் வருங்காலங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.