நெல்லையில் 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல்: முதியவர் கைது


நெல்லையில் 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல்: முதியவர் கைது
x

நாங்குநேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்களை சிங்கக்குட்டி என்பவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான காவல் துறையினர் நேற்று (7.5.2026) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏமன் புதுகுளத்தைச் சேர்ந்த சிங்கக்குட்டி (வயது 70) என்பவரை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் சிங்ககுட்டியை நாங்குநேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவரை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

1 More update

Next Story