செங்குன்றம் அருகே ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

செங்குன்றம் அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள 200 கிலா செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம் அருகே ரூ.5 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Published on

செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி மினி வேனில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் எடப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக செங்குன்றம் நோக்கி வந்த மினிவேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 200 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக சென்னை கொளத்தூர் திருமால் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த சந்திரசேகர்(வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளுடன், மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த செம்மரக்கட்டைகளை எங்கிருந்து, எங்கு கடத்தி செல்லப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com