எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்-அமைச்சர் பாராட்டு

எழுத்தறிவு பெறும் திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சியோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 100 சதவீதத்தோடு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்காக உழைத்த பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.

அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com