சேலத்தில் குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 5 பேர் கைது

சேலத்தில் குடானில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தில் குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 5 பேர் கைது
Published on

அன்னதானப்பட்டி,

புகையிலை பொருட்கள்

சேலம் கந்தம்பட்டி பைபாஸ் ராஜகணபதி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் குடோனில் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனைக்கு எடுத்து சென்று வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பாது அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலையில் ரகசியமாக சிலர் குடோன் வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்கள் பதுக்கி ஆட்டோவில் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு சென்று விற்றுவந்தது தெரியவந்தது. காரில் பெங்களூருவில் இருந்து சேலம் கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

ரூ.5 லட்சம்

இதையடுத்து அந்த குடானில் சாதனை நடத்தினர். அங்கு ஹான்ஸ், பான் பராக் பான் மசாலா, கூல் லிப் உள்ளிட்ட தடை சய்யப்பட்ட புகயில பொருட்கள் 30 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 277 கிலோ ஆகும். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த ஹிதீஷ் குமார் (வயது 39), சரவணக்குமார் (29), வர்ஜிங் ராம் (24), 18 வயதுடைய சிறுவன், மற்றும் சேகோ ஆலை உரிமையாளர் அன்பழகன் (51) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com