சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
Published on

சென்னை,

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு கருதி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி உள்ளிட்ட பல்வேறு அணுசக்தி துறை சார்ந்த பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

அணுமின் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருசக்கர வாகனம் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பபடுகின்றன. குறிப்பாக வெடிகுண்டு சோதனைக்காக வேன் மற்றும் பேருந்துகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகனங்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து அனுப்பப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com