5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
5 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
Published on

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பாசில், அன்பரசன், சந்திரன் வள்ளி மற்றும் ஊழியர்கள் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து அரசம்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு புகையிலை பொருட்கள் விற்ற 2கடைகளின் உரிமையாளர்களுக்குதலா ரூ.200 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த சோதனையில் மொத்தம் 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com