5 பேர் கோர்ட்டில் ஆஜர்

5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
5 பேர் கோர்ட்டில் ஆஜர்
Published on

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது, மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மகிளா கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சிகாமணிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதா மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது மதுரை ஐகோர்ட்டு நீதிபதி இளங்கோவன், அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வருகிற 1-ந் தேதிக்கு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராமநாதபுரம் கூடுதல் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது சிகாமணி உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை வரும் 1-ந் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com