சூதாடிய 5 பேர் கைது

நெல்லை அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூதாடிய 5 பேர் கைது
Published on

நெல்லை அருகே தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாராணம்மாள்புரம் ஆற்றுப்பாலம் அருகே சிலர் காசு வைத்து சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சூதாடியதாக பொட்டல் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த செந்தில் (வயது 30), திருச்சியை சேர்ந்த முருகன் (56), அருகன்குளத்தை சேர்ந்த முருகன் (49), சீவலப்பேரியை சேர்ந்த ஏசுராஜ் (38), மகாராஜன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com