சூதாடிய 5 பேர் கைது

கடையநல்லூர் அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூதாடிய 5 பேர் கைது
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் செங்குளத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சீட்டு விளையாடி கொண்டிருந்த 5 பேர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 33), பெரியசாமி (40), சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (48) மற்றும் சங்கிலி, கணேசன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரத்து 900-ஐ கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com