தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 81 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

கடந்த 21.6.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி, சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா (வயது 24), திருநெல்வேலி, ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ்(28) மற்றும் கடந்த 24.6.2025 அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி, டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்தவர்களான மாடசாமி மகன் மாரிலிங்கம்(24), பாலா மகன் ராஜ்குமார் (29), தூத்துக்குடி, அண்ணாநகரைச் சேர்ந்த வசமுத்து மகன் அருஞ்சுணைமுத்து(எ) அருண்(22) ஆகிய 5 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேற்று (24.7.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் மேற்சொன்ன 5 பேரையும் நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த ஆண்டு இதுவரை 81 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com