ஆயுதங்களுடன் 5 பேர் கைது

நெல்லையில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆயுதங்களுடன் 5 பேர் கைது
Published on

நெல்லை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பெருமாள்புரம் இலந்தைகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டு இருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுடலைகண்ணு (வயது 28), இசக்கிவடிவு (37), மணிகண்டன் (37), இசக்கிமுத்து (41), பொன்செல்வம் (28) ஆகியோர் என்பதும் அவர்கள் கூட்டாக சேர்ந்து சதி திட்டத்தில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com