மதுரை அருகே கார் விபத்தில் 5 பேர் பலி

கொட்டாம்பட்டி போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை அருகே கார் விபத்தில் 5 பேர் பலி
Published on

மதுரை,

மதுரை - அய்யாபட்டி அருகே நடந்த கார் விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக கொட்டாம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com