முன்விரோத தகராறில் 5 பேருக்கு கத்திவெட்டு

முன்விரோத தகராறில் 5 பேருக்கு கத்திவெட்டு விழுந்தது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனா.
முன்விரோத தகராறில் 5 பேருக்கு கத்திவெட்டு
Published on

கண்டாச்சிபுரம் தாலுகா வி.சித்தாமூரை சேர்ந்த திருமுருகன் மனைவி ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 24-ந் தேதி மாலை வயல் வேலையை முடித்துக்கொண்டு எனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். அப்போது முன்விரோதம் காரணமாக என்னை வி.சித்தாமூரை சேர்ந்த ரவி மனைவி விஜயா, அவரது மகன் சுந்தர், ஜெகநாதன், சேஷாங்கனூரை சேர்ந்த வீரப்பன் ஆகியோர் திட்டி தாக்கி கத்தியால் வெட்டினர். இதை தடுக்க வந்த எனது உறவினர்களான முத்துலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, லட்சுமணன் ஆகியோரையும் கத்தியால் வெட்டினர். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதில் தலையிட்டு எங்கள் 5 பேரையும் தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com