சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மர்மநபர்கள் 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்னை மார்க்கமாக தப்பிச் சென்று விட்டனர்.
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
Published on: 

திண்டிவனம்,

திண்டிவனத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எஸ்.வி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 60). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வசிக்கும் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர், நேற்று அங்கிருந்து பஸ் மூலம் மதியம் 2.30 மணியளவில் திண்டிவனம் தனியார் பள்ளி பஸ் நிறுத்தத்தில் வந்திறங்கினார்.

பின்னர், அவர். அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி சர்வீஸ் சாலையில் சென்றபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென கஸ்தூரி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்னை மார்க்கமாக தப்பிச் சென்று விட்டனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com