வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

கடையநல்லூர் அருகே வீட்டில் 5 பவுன் நகை திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துச்சாமி மனைவி காமாக்காள் (வயது 60). இவர்களது மருமகளுக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவரை ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கடந்த 7-ந் தேதி காமாக்காள் தனது வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக காமாக்காள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com