5 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

பட்டிவீரன்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5 ஆயிரம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
Published on

பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பட்டிவீரன்பட்டி பஸ்நிறுத்தம் அருகே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், வேடசந்தூரை சேர்ந்த மகேந்திரபிரசாத் (வயது 23) என்று தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட 5 ஆயிரம் லாட்டரி சீட்டுகள், ரூ.18 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரபிரசாத்தை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com